சின்ன திரையில் இருந்து தனது அயராது உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் சிவகார்த்திகேயன் இவர் தற்பொழுது சினிமாவில் தனகென்ன ஒரு இடத்தை பிடித்து வெற்றி பாதையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.

Vignesh-Shivan sivakarthikeyan
Vignesh-Shivan sivakarthikeyan

தற்பொழுது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார், இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார், காமெடி நடிகராக பரோட்டா சூரி களம் இறங்கியுள்ளார், மேலும் சிம்ரன், நெப்போலியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிரார்கள்.

இந்த படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருக்கிறார் நடிகை ராகுல் பரீத் சிங் நடிக்க இருக்கிறார்.

VIGNESH SHIVAN

இதையடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வந்தன,ஆனால் சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டுவிட்டு  தற்பொழுது, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குனர் ராஜேஷுடன் இணைய இருக்கிறார் என்றும் படத்தை ஞானவேல் ராஜா தான் தயாரிக்கிறார் என்ற செய்திகள் வந்துள்ளான.