fbpx
Connect with us

சூப்பர் ஸ்டாரே வியந்து போன இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.. பசியுள்ளவன் ருசி அறியான்

rajini-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரே வியந்து போன இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.. பசியுள்ளவன் ருசி அறியான்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் கடும் போட்டியாளராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, அதன்பின் தனது பன்முகத் திறமையினால் ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டியராஜன் மூலம் ‘மெரினா’ என்ற படத்தில் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின் இவருடைய காமெடி கலந்த இயல்பான நடிப்பினாலே இவருக்கு பல வெற்றிப்படங்கள் கிடைத்தது. தற்போது ‘டாக்டர்’, ‘அயலான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அட்லியின் துணை இயக்குனரிடமும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன் போன்ற பிரபலங்கள் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தேசிங் பெரியசாமி. இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல பிரபலங்களிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்றார்.

அதன்பின் தேசிங் பெரியசாமி, தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை மனதில் வைத்துக்கொண்டு அவருக்காகவே பிரம்மாண்ட கதை ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முழு ஸ்கிரிப்ட் வேலையும் முடிந்தபின் சிவகார்த்திகேயனிடம் கதையை சொல்லி ஒப்புதல் பெற்று, படத்திற்கான முழு விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளாராம்.

சிவகார்த்திகேயன்,தேசிங் பெரியசாமி கூட்டணி கைகோர்த்தால் நிச்சயம் அந்த படம் வெற்றி படமாகவே இருக்கும் என்று கோலிவுட் தரப்பில் கணிக்கப்படுகிறது.

Continue Reading
To Top