fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் OTT ரிலீஸ்.. சோணமுத்தா போச்சா என கொண்டாட்டத்தில் சில வாரிசு நடிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் OTT ரிலீஸ்.. சோணமுத்தா போச்சா என கொண்டாட்டத்தில் சில வாரிசு நடிகர்கள்

கடந்த எட்டு வருடத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து கோலிவுட் வட்டாரங்களில் பொறாமைப்படாத நடிகர்களே கிடையாது. 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் கூட இந்தளவு வளர்ந்திருப்பார்களா என்பது தெரியவில்லை.

சில படங்கள் சொதப்பினாலும் உடனடியாக தனக்கு எது சரியாக வரும் என்பதை தெரிந்து கொண்டு ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்து இழந்த தன் மார்க்கெட்டை மீட்டு விடுவார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படம் தோல்வியை தழுவினாலும் அதற்கு முன்னர் வந்த நம்ம வீட்டுப்பிள்ளை பெரிய அளவில் வசூல் செய்தது.

அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் படம்தான்.

இன்னும் பதினைந்து நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்துக்கான OTT வியாபாரம் தொடங்கி உள்ளதாம். விஜய், அஜீத், சூர்யா படங்களுக்கு அடுத்து மிகப் பெரிய விலைக்கு வாங்க ரெடியாக உள்ளதாம் அமேசான் நிறுவனம்.

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு என்பதால் 30 கோடி வரை பேரம் நடைபெற்று வருகிறதாம். இருந்தாலும் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில் பொங்கலுக்கு படத்தை கொண்டுவர மிக ஆர்வமாக இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

பொங்கலுக்கும்தியேட்டரில் கூட்டம் இல்லை என்றால் நேரடியாக OTT தளத்தில் விற்றுவிட வேண்டியதுதான் என முடிவு செய்துள்ளாராம். முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top