ரெமோ படத்தில், தயரிப்பாளருக்கு கார் இல்லைன்னு மேடையில் அழுது, படத்தை ஓட வைத்த சிவகார்த்திகேயன், தற்போது நயன்தாரா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தை நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படத்தின் டாக்கி போர்ஷன்கள் ஓரளவு முடிந்துவிட்டதாம்.

ஒரு பாடல் மலேசியாவில் ஷூட் செய்யலாம் என்று இருக்கிறார்களாம். இன்னும் பைட், மற்ற சமாசாரங்கள் என்று ஒரு பாதி படம் மீதி இருக்கிறதாம். முழுக்க முழுக்க சென்னையில் நடப்பதுபோல கதை தானாம்.

வில்லனாக பஹத் பாசில், அவர் ஜோடியாக சினேகா நடிக்கிறார்கள். சிவா சென்னை சேரி பையனாக நடிக்கும் இக்கதையில், இந்திய அளவில் இருக்கும் உணவு அரசியல் பேசப்படுகிறதாம். தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்குகின்ற படம்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தை எப்படி ஓட வைக்கப்போகிறாரோ?