Tamil Cinema News | சினிமா செய்திகள்
சம்பளத்தில் சூர்யாவை நெருங்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த பட சம்பளத்தை கேட்டு கலக்கத்தில் முன்னணி நடிகர்கள்
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகராக உள்ளார் சிவகார்த்திகேயன். கைவசம் டாக்டர் படம் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த மூன்று படங்களுக்கான ஒப்பந்தங்கள் செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது ரஜினிதான். கடைசியாக தர்பார் படத்திற்கு 106 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து விஜய் தளபதி65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 100 கோடி சம்பளம் பேசியிருந்த நிலையில் தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் அதிலிருந்து சில கோடிகள் குறைத்து 80 கோடியை இறுதி செய்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து தல அஜித் வலிமை படத்திற்காக 60 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா சமீபகாலமாக வெளிப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் வட்டாரத்திலேயே நடித்து வந்த சூர்யா தற்போது தான் நீண்ட நாட்களுக்கு பிறகு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்திற்காக அவர் 30 கோடி சம்பளம் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு சுமார் 22 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளாராம். சூர்யாவை விட சில கோடிகள் மட்டுமே குறைவு.
தற்போது முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியாக சிவகார்த்திகேயன் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவது பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
