Sivakarthikeyan-Dhanush
Sivakarthikeyan-Dhanush

நடிகர் சிவகார்த்திகேயன் அதிவேகமாக வளரும் நடிகர்களில் ஒருவர் இவருக்கு வேலைக்காரன் படம் சினிமா பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது, அந்த படத்தில் மக்களுக்காக ஒரு கருத்தை தெரிவித்தார் அதேபோல் அவரும் மக்களுக்கு கேடு விளைவிக்கும் விளம்பத்தில் நடிக்கமாட்டார் என உறுதி அளித்துள்ளார் சிவா தற்பொழுது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Vignesh-Shivan sivakarthikeyan
 sivakarthikeyan

மேலும் தற்பொழுது பொன்ராம் இயக்கத்தில்  சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார், இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் படத்தில் நடிகிறார், பெயரிடபடாத இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார் இதனால் சிவா மற்றும் ராகுல் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் ரவிக்குமார் படத்தை தொடர்ந்து இயக்குனர்  ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க இருக்கிறார்கள், இந்த படத்தின் ப்ரீ-புரடக்ஷன் நடந்து வருகிறது.

saipallavi
saipallavi

ராஜேஷ் இயக்கும் இந்த படத்திற்கு நடிகை சாய் பல்லவியை ஹீரோயினாக நடிக்க வைக்க இருக்கிறார்கள், நடிகை சாய் பல்லவி தனுஷின் மாரி-2 மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் NGK படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவிக்கு சூர்யாதான் ரொம்ப பிடித்த நடிகராம் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.