தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னிடம் கதை சொல்ல வரும் இளம் இயக்குனர்களுக்கு புதிய கண்டிஷன் போடுவது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
உழைத்தால் எவரும் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது ரொம்ப வருஷமாக சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எல்லாம் அசால்டாக தூக்கி சாப்பிட்டு விட்டார்.
அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இருந்தாலும் தற்போது கொரானா பரவல் அதிகமாக இருப்பதால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான்.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்க கதை கேட்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் இந்தமுறை தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு ஒரு புதிய கண்டிஷன் போட்டுள்ளாராம்.
தயவுசெய்து படங்களில் தண்ணியடிப்பது, தம் அடிப்பது போன்ற எந்த காட்சியும் வைக்க வேண்டாம் எனவும், தன்னுடைய படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் அறவே தவிர்த்து விடவும் கோரிக்கை வைத்துள்ளாராம்.
இதனால் இளம் இயக்குனர்கள் செம அப்செட்டாம். ஒயின்ஷாப் காட்சிகளை வைத்து பெரிய அளவில் காமெடி காட்சிகளை தயார் செய்து வைத்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்படி சொல்லியிருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.