Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை பிசுறு தட்டாமல் செய்த சிவகர்த்திகேயன்.! Mr.லோக்கல் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்.!
sivakarthikeyan Mr.Local : விஜய்யை பிசுறு தட்டாமல் காப்பி அடித்த சிவகர்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக விரைவாக உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார், இவரின் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எகிறி கிடக்கிறது.
சிவா, நயன்தாரா மற்றும் SMS ராஜேஷ் இணையும் படம். இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.
ஏற்கனவே கோடம்பாக்கத்தில் கிசு கிசுத்தது போலவே இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்றே பெயர் வைத்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் நாற்காலியில் கோட் சூட் போட்டுகொண்டு கையில் டீ வைத்துகொண்டு உட்காந்திருப்பது போல் வெளியானது சமீப காலமாக போஸ்டர் காப்பி சர்ச்சை தொடர்ந்து வருகிறது இதில் இப்பொழுது சிவா சிக்கியுள்ளார்.
இந்த போஸ்டரை பார்த்தால் விஜய் ஜில்லா படத்தில் போஸ் கொடுத்துள்ளது நினைவுக்கு வரும் இந்த இரண்டு போஸ்டருக்கும் பெருசா வித்தியாசம் இல்லை இதை பார்த்த விஜய் ரசிகர்கள் விமர்ச்சித்து வருகிறார்கள்.
