Nayanthara,

சிவகர்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் ‘இறைவா’ என்கிற சிங்கிள் ட்ராக் யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியிருக்கிறது.

velaikaran

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் ‘இறைவா…’ சமீபத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யுடியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டி சமூக வலைதலங்களில் வைரலாக மாறியுள்ளது.

velaikaran

ரஜினி,கமல்,விஜய்,அஜித் போன்ற நட்சத்திர நாயகர்களின் படங்களின் பாடல்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு பெருகி, இப்படியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டமுடியும்.

அந்த வரிசையில், வளர்ந்து வரும் இளம் நாயகன் சிவகார்த்திகேயனின் படப் பாடல் யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியிருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்சன்ஸ் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

velaikaran

வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இறைவா’ பாடலின் படப்பிடிப்பு, சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்றது. சென்னையிலும் சில நாட்கள் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்கினர். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, நாளை ஃபேர்வெல் டே கொண்டாட இருக்கிறது படக்குழு.

‘வெள்ளிக்கிழமை வேலைக்காரனில் பணிபுரிந்த வேலைக்காரர்களைக் கவுரவிக்கும் #VelaikkaranFarewellDay’ என 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதேபோல், கடந்த வருடம் ‘ரெமோ’ படத்துக்கும் ஃபேர்வெல் டே கொண்டாடப்பட்டது. ‘வேலைக்காரன்’ படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ளது.

velaikaran

ஒரு படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்க 68 நாட்கள் ஆகும் என சென்சார் போர்டு அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் ‘வேலைக்காரன்’ ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.