சிவகார்த்திகேயன் படத்தில் களமிறங்கும் கவுண்டமணி.. என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவாக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஆசிரியர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு படக்குழுவினர் பிரபல காமெடி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெற்ற அதே அளவிற்கு காமெடியாகவும் வெற்றி பெற்றுள்ளார். இவரது படத்தில் பெரும்பாலான காட்சிகள் காமெடியாக இருக்கும். அதனால் இவர் கல்லூரியில் செய்யும் சேட்டைகளுக்கு எதிராக காமெடி சேட்டை செய்யும் ஆசிரியர் கதாபாத்திரம் வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

கவுண்டமணி சமீபகாலமாக பெரிய அளவில் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க வில்லை. ஆனால் பல இயக்குனர்களும் கவுண்டமணி வைத்து படங்களை இயக்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயனுக்கு இணையாக கவுண்டர் கொடுக்கக்கூடிய கவுண்டமணியை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளனர்.

sivakarthikeyan goundamani
sivakarthikeyan goundamani

சேட்டை செய்யும் மாணவனுக்கு இணையாக ஆசிரியர் சில சேட்டைகள் செய்வது போல் காட்சிகள் உள்ளன. அதனால் மாணவனாக சிவகார்த்திகேயனும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் கவுண்டமணியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் படத்தில் பெரிய வரவேற்பு பெறும் என கூறி வருகின்றனர். ஆனால் உண்மையாகவே படத்தில் நடிக்கிறார்கள் இல்லை இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்