Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொடர்ந்து பாலிவுட் நடிகர்களுக்கு வலைவிரிக்கும் சிவகார்த்திகேயன்.. ராஜதந்திரம் தான்
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்கள் அளவுக்கு வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவரது ஒருசில படங்கள் சறுக்கினாலும் தனது அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன் பட வியாபாரம் மற்ற இரண்டாம் நிலை நடிகர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. முன்னணி நாயகர்களாக இருக்கும் நாலைந்து நடிகர்களுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஹீரோ படம் அதலபாதாளத்துக்குச் சென்றது. இருந்தும் மீசையில் மண் ஒட்டாத வைப்போல் படம் பெரிய வெற்றி என தயாரிப்பு நிறுவனம் சுற்றி சுற்றி விளம்பரம் செய்து வருகிறது.
சிவகார்த்திகேயன் மீது இருந்த அதீத நம்பிக்கையால் அப்பொழுதே இரண்டாவது படத்தை ஒப்புக் கொண்டது தயரிப்பு நிறுவனம். அனால் ஹீரோ வியாபாரம் டல் அடித்ததால் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனையும் தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டதன் காரணம் புரிகிறதா.
ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் ரகுல் பிரீத் சிங் தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி. இதனால் பொதுவாகவே படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் என்பவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஹீரோ படத்தில் நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் பாலிவுட் நடிகரை இணைக்கலாம் என கூறியதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயன் பாலிவுட் பக்கமும் தன்னுடைய படங்களின் மார்க்கெட்டை அதிகப்படுத்துவது முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயனுக்கு ராஜ தந்திரங்களை சொல்லிக் கொடுக்கவா வேண்டும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
நீங்க நடத்துங்க ராஜா!
