Home Tamil Movie News சிவகார்த்திகேயன் ரஜினியிடம் கேட்ட கதாபாத்திரம்.. 50 வருட போராட்டத்தை அசால்டா நினைத்த எஸ் கே

சிவகார்த்திகேயன் ரஜினியிடம் கேட்ட கதாபாத்திரம்.. 50 வருட போராட்டத்தை அசால்டா நினைத்த எஸ் கே

rajini-sivakarthikeyan1
rajini-sivakarthikeyan1

ரஜினி-கமல், விஜய் -அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இடத்திற்கு அடுத்து யார் என்ற போட்டி எப்பொழுதுமே சினிமா வட்டாரத்தில் போய்க்கொண்டு தான் இருக்கும். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே இந்த சண்டை ஓய்ந்தபாடில்லை.

சமீபத்தில் வெளிவந்த கோட் படத்தில் பேசப்பட்ட வசனங்களை வைத்து பார்க்கையில் அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் தான் என அனைவரும் கூறுகின்றனர். படத்தில் அப்படி ஒரு வசனம் இருக்கிறது. சிவகார்த்திகேயன், விஜய்யி டம் உங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கிறது. உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என படத்தில் கூறுகிறார்.

இப்படி பேசிய வசனங்களுக்கு மக்கள் கை, கால், காது மூக்கு வைத்து பேசுகின்றனர். விஜய் ஒன்றும் குழந்தை இல்லை வேண்டுமென்றே இந்த வசனம் படத்தில் வைக்கப்பட்டது என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு பெரிதும் கஷ்டப்பட்டு இருக்கின்றனர்.

50 வருட போராட்டத்தை அசால்டா நினைத்த எஸ் கே

ரஜினிகாந்த் 40 வருட சினிமா வாழ்க்கையில் இந்த இடத்தை அடைந்திருக்கிறார் அவரைப் போலவே விஜய்யும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக உழைத்து இருக்கிறார். இவர்கள் இருவரும் காதல், குடும்பம், காமெடி, ஆக்சன் என பல வெற்றி படங்கள் கொடுத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முயன்றுள்ளார். அவரது நண்பன் நெல்சன் மூலம் சிபாரிசு செய்துள்ளார் ஆனால் ரஜினிகாந்த் அதற்கு சம்மதிக்கவில்லை. இப்படி கடின உழைப்பில் வந்த இடத்தை சிவகார்த்திகேயனால் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

- Advertisement -spot_img