Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனை விரட்டி விரட்டி பிடிக்கும் லைக்கா.. 15 கோடியை மொத்தமா ஏப்பம் விட்டு விட்டாராம்!
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி படத்திற்கு படம் பிரமாண்ட வெற்றிகளை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
அவரது படங்களுக்கு வசூலும் தாறுமாறாக இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இருந்தாலும் சமீபத்தில் வந்த மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற படங்கள் அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.
இதனால் எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி சேர்ந்த டாக்டர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ரெமோ படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சமீபகாலமாக தன்னுடைய படங்களை சொந்த தயாரிப்பிலேயே தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சீமராஜா படத்தின் போது, அப்போது பல படங்களை தயாரித்து கொண்டிருந்த லைக்கா நிறுவனம் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கூட்டணியில் ஒரு படத்தை உருவாக்க திட்டம் போட்டனர்.
அதற்காக சிவகார்த்திகேயனுக்கு முழு சம்பளமான 15 கோடியும் அந்த நிறுவனம் கொடுத்துவிட்டது. ஆனால் அதன்பிறகு படம் டிராப் ஆனது. இருந்தாலும் சிவகார்த்திகேயன் அந்த பணத்தை கொடுக்காமல் லைக்கா நிறுவனத்தை பாடாய்படுத்தி உள்ளார்.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு மிகவும் விவரமாக செயல்படும் லைக்கா நிறுவனம் உடனடியாக சிவகார்த்திகேயனை ஒரு படம் செய்து தர வேண்டும், அல்லது கொடுத்த காசை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என கிடுக்கு பிடி போட்டு விட்டார்களாம்.
சிவகார்த்திகேயனுக்கு காசை திரும்ப கொடுக்க மனதில்லை போல. மீண்டும் ஒரு படம் பண்ணி தருகிறேன் என வாக்கு கொடுத்துள்ளாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தங்களது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளனர்.
