சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இடம் பிடித்துள்ளார்.

Kamalahaasan
Kamalahaasan

நடிகர், நடிகைகளை சமூக வலைத்தளங்களில் தொடருவோர் எண்ணிக்கை, அவர்களுக்கு தனி அந்தஸ்தாக கருதப்படுகிறது. டுவிட்டரில் தொடருவோர் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் நடிகர்களில் தனுஷ் முதல் இடத்தில் இருக்கிறார். இவரை 60 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ரஜினியை 40 லட்சத்து 33 ஆயிரம் பேர் டுவிட்டரில் தொடர்கிறார்கள். டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் கமல்ஹாசனை தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் பேர்.

rajinikanth

இந்த வரிசையில் இப்போது இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது புதிய புகைப்படங்கள், தனது படம் பற்றிய தகவல்களை அடிக்கடி டுவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

இதன்மூலம் டுவிட்டரில் சிவகார்த்திகேயனை தொடர்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இதுபற்றி கூறியுள்ள அவர், ‘இவ்வளவு பெரிய ஆதரவு தந்த அன்பான சகோதர, சகோதரிகள், ரசிகர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

ஆனால், நடிகர் விஜயின் ட்விட்டர் கணக்கை 13 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்கிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.