செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிவகார்த்திகேயனுக்கும் கவினுக்கும் என்ன பிரச்சனை?. ஒரே நாளில் படம் ரிலீஸ் பண்ண இப்படி ஒரு காரணமா?

Sivakarthikeyan: இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும் போதே சிவகார்த்திகேயனுக்கும், கவினுக்கும் என்ன சம்பந்தம் என தோன்றியிருக்கலாம். ரெண்டு பேரும் விஜய் டிவி ப்ராடக்டுகள் என்பதை தாண்டி பெரிய அளவில் எந்த சம்பந்தமும் இல்லை.

இருந்தாலும் தீபாவளி தினத்தன்று இவர்கள் இரண்டு பேரின் படமும் ரிலீஸ் ஆனது. நேருக்கு நேர் மோதிப் பார்த்து யார் வெற்றி பெறுகிறார் என பார்த்து விடலாம் என்ற நிலைமை தான். சிவகார்த்திகேயன், கவின், பிளடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள்.

அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்து இருப்பார்கள். அப்படின்னா சிவகார்த்திகேயனுக்கும் கவினுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையா என வலைப்பேச்சு சேனலுக்கு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கும் கவினுக்கும் என்ன பிரச்சனை?

இதற்கு வலைப்பேச்சு பிஸ்மி தெள்ளத் தெளிவாக ஒரு பதில் சொல்லி இருக்கிறார். ஒரே நாளில் படம் ரிலீஸ் ஆகிறது என்பதால் இருவருக்கும் பிரச்சனை என்பது எல்லாம் கிடையாது. ஒரு படம் எப்போது ரிலீஸ் ஆக வேண்டும் என்பது அதன் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவு.

வட்டிக்கு பணம் வாங்கி படத்தில் முதலீடு போடுபவர்கள் எப்போ படத்தை ரிலீஸ் பண்ணலாம், எப்போ வட்டியுடன் பணத்தை செட்டில் பண்ணலாம் என்றுதான் யோசிப்பார்கள். இதைத் தாண்டி நட்பு, உறவு முறை என்பதையெல்லாம் இங்கு பார்த்தால் வேலைக்கு ஆகாது என சரியான பதிலை கொடுத்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தீபாவளி ரிலீஸ் தவற விட்டு விட்டால் அடுத்து ரிலீஸ் செய்யும் பொழுது, படம் சூர்யா நடித்த கங்குவா படத்துடன் மோத வேண்டிய நிலைமை ஏற்படும். பெரிய ஹீரோ உடன் மோதுவதை விட தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடலாம் என்று தான் முடிவு எடுத்திருப்பார்கள். அதிலும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் முழுக்க முழுக்க மாறுபட்ட திரைப்படம். அதனால் போட்டிக்காக ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அபத்தம்.

- Advertisement -

Trending News