ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இரண்டாம் வாரத்திலும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இடைவெளியில் தற்போது ரெமோ படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டு வருகிறதாம்.