சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

கண்டிஷன் போட்டு சம்பளத்தை வாங்கும் சிவகார்த்திகேயன்.. சென்டிமென்டில் சிக்கிய சம்பவம்!

தமிழ் சினிமாவில் துறைச்சார்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது வழக்கம். அப்படி எத்தனையோ உதவிகள் எவருக்கும் தெரியாமல், சத்தமே இல்லாமல் செய்தும் இருக்கின்றனர். உச்ச நடிகர்களான அஜித்,விஜய், சூர்யா, விக்ரம் ஆரம்பித்து வளர்ந்து வரக்கூடிய RJ. பாலாஜி வரை பல உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் எவரும் எதிர்பாராத உச்சத்தை அடைந்த சிவகார்த்திகேயனும் இணைந்து இருக்கிறார்.

அவர் தற்போது பலப்படங்களில் பிசியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல், பல படங்களுக்கு பாடல்கள் எழுதியும் அசத்தி வருகிறார். அதிலும் அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துருச்சுடி பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதன் பின் தான் இவருக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என்று வெளியில் தெரிந்தது.

இப்படி படிப்படியாக வளர்ந்து இப்போது தளபதியின் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து என்னும் பாடலை எழுதும் அளவிற்கு வளர்ந்தும் இருக்கிறார். இவர் எழுதும் சிலப்படங்களின் பாடல்கள், இவருடைய சொந்த தயாரிப்பு என்பதால் பாட்டு எழுதும் செலவை குறைக்க அவரே எழுதி விடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது, பிறப்படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதும்போது அதற்காக ஒரு பெரிய தொகையை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

அதான் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறாரே..? அப்புறம் எதுக்கு இவ்வளவு கறார் காட்டுகிறார் என்றால், மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு இவர் வாங்கும் தொகையை வைத்து உதவி வருகிறாராம்.அப்படி என்ன சிவாவுக்கும் முத்துக்குமாருக்கும் என்று கேட்டால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள் இல்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படத்தில் காதல் ஒரு தேவதையின் கனவா என்ற பாடலையும் மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் என்ற பாடலையும் எழுதியவர் நா. முத்துக்குமார். அவ்வளவுதான் இருவருக்கும் உள்ள நெருக்கம். ஆனால் அவரின் குடும்பத்திற்கு இப்போது உதவி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு முன்னர் சிவாவின் நண்பரான 24AM ஸ்டுடியோஸ் RD. ராஜா கடன் தொல்லையில் சிக்கி தவித்தபோது கை கொடுத்தவர் சிவகார்த்திகேயன். இப்படி பல நல்ல செயல்களை செய்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சிறந்த மனிதராக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார். அதுமட்டுமின்றி ஒருவரின் மீது கொண்ட அன்பினால் அவர் இறந்த பின்பும் கூட அவரின் குடும்பத்துக்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யும் அந்த மனது கடவுளுக்கு நிகரானது என்று இணையவாசிகள் சிவாவை பாராட்டி வருகின்றனர்.

Trending News