Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் கதை இந்த படத்தின் தழுவலா? வர வர தமிழ் படத்த சுட்டு தமிழ் படம் எடுக்குறாங்கபா!

doctor-sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் கதை இந்த படத்தின் தழுவலா? வர வர தமிழ் படத்த சுட்டு தமிழ் படம் எடுக்குறாங்கபா!

தமிழ் சினிமாவில் வர வர தமிழ் படங்களையே காப்பியடித்து எடுக்கும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அட்லீ படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களும் வரிசை கட்டி வர ஆரம்பித்துவிட்டன.

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி பெயரை எடுத்துக் கொண்டது. படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதற்கு முன் வெற்றி பெற்ற நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் கூட விஜயகாந்த் நடிப்பில் உருவான சொக்கத்தங்கம் படத்தின் கதை தான்.

இயக்குனர்கள் செய்யும் தவறுக்கு பாவம் ஹீரோக்கள் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேட்டி கொடுத்திருந்தார்.

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் இயக்குனரும் இவர்தான். சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கண்டார். ஆனால் அந்த படமும் கொரிய படத்தின் காப்பி என குற்றம் எழுந்தது. இருந்தாலும் அந்த காப்பியடித்த மேட்டர் பெரிய அளவு வெளிவராமல் அப்படியே மூடி மறைத்து வைத்தனர்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் சில நாட்களில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். மேலும் படத்தின் கதையில் பேருக்குத்தான் டாக்டர் எனவும், அவருக்கு வேற ஒரு வேலையைக் கொடுத்து உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தின் கதையையும், ஹாலிவுட்டில் வெளியான த குட் டாக்டர் எனும் ஆங்கில படத்தின் கதையும் கலந்து கட்டி உருவாகியுள்ளதாம். டாக்டர் பட வெளியீட்டிற்குப் பிறகு இந்த படம் சர்ச்சையை கிளப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இயக்குனரின் பேச்சை பார்த்தால் கண்டிப்பாக எதிலிருந்தும் கதை எடுத்திருக்க மாட்டார் என்பது போலத்தான் தெரிகிறது. இருந்தாலும் ஊர் வாயை மூட முடியுமா?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top