Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்.. சமூக வலைத்தளத்தை வேட்டையாடும் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த தர்பார் மக்களிடையே போதுமான வரவேற்பை பெற்றுது. தனது அடுத்த படத்தில் களமிறங்கி நடித்து வரும் ரஜினிகாந்தின் படத்தலைப்பு ‘அண்ணாத்த’,’மன்னவன்’ என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார், சித்தார்த் மற்றும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதுமட்டுமல்லாமல் மீனா, குஷ்பு இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சித்தார்த்துக்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று ட்விட்டரில் #WeWantSKForThalaivar168 ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணியின் கிரிக்கெட் போட்டியின் நேரலையில் தலைவர் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறிய சிவகர்த்திகேயன். தற்போது அது உறுதி ஆகிவிடுமோ என்பது போன்ற மற்ற ரசிகர்களை ட்விஸ்ட் செய்வது போல் உள்ளது.
ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை மிமிக்கிரி செய்வதன் மூலம் பெயர் பெற்றவர் சிவகார்த்திகேயன் என்றே கூறலாம். தலைவர் கூட நடிப்பதை படக்குழு உறுதி செய்யும் வரை காத்து கொண்டு இருக்க வேண்டிய தான்.
