Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் அயலான்.. புதுசா இருக்கே!
ஏ ஆர் ரகுமான் இசையில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 14வது திரைப்படமாக தொடங்கப்பட்ட இந்த படம் பைனான்ஸ் சிக்கலில் சிக்கி சீரழிந்தது.
24am ஸ்டுடியோஸ் உரிமையாளர் ராஜா சிவகார்த்திகேயனின் சில படங்கள் சறுக்கியது பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். மேலும் இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்.
இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சுமார் 2 வருடம் இந்த படம் கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் ராஜா கொஞ்சம் கொஞ்சமாக கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
படத்தில் 75 சதவீத காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்ட இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் அடுத்த ஆண்டில்தான் வெளியாகும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. எனினும் இந்த படத்தின் டைட்டிலை ஏ ஆர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் மோஷன் போஸ்டர் வெளியிட்டார்.
இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முறையாக ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடியோவை பார்க்க
