Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோடிகளை குவிக்கும் நம்ம வீட்டு பிள்ளை.. நான்கு நாட்களில் இவ்வளவு கோடியா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை.
சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் தன்னை வைத்து 2 ஹிட் கொடுத்த இயக்குனரான பாண்டிராஜ் இயக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் உருவாகியிருந்த இப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வெளியான நாள் முதல் இருந்தே படம் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை சென்னையில் மட்டும் ரூ.2.35 கோடி வரை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் நான்கு நாட்களில் சுமார் ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்த வாரத்தில் பெரிய படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்பதால் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் கலெக்ஷன் குறைய வாய்ப்புள்ளது. இருந்தாலும் குடும்ப ஆதரவு பெற்ற எந்த படமும் தோற்பதில்லை என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்றாகும்.
