Videos | வீடியோக்கள்
சமூக சிக்கல்களை சீர்திருத்த கிளம்பும் சிவகார்த்திகேயன்.. அதுவும் ஹீரோவாக.. அசத்தல் டீசர்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் ஹீரோ. சூப்பர் ஹீரோ கதையில் உருவாகி வரும் இந்த படத்தை இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
காசு இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும், போலிகளுக்கு பஞ்சமே இல்லை என்பதையும் மேலும் இதையெல்லாம் சூப்பர் ஹீரோ வேஷம் போட்டு சிவகார்த்திகேயன் தட்டிக் கேட்பது போலவும் டீசர் சொல்லாமல் சொல்லும் கதை. இந்த டீசரை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஹீரோ கதையில் பல ஹீரோக்கள் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் காரணமாக இந்த படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆக்சன்கிங் அர்ஜுன், சூப்பர் ஹீரோவை உருவாக்கும் முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமூடி படத்தின் சாயலில் இந்த டீசர் இருப்பதால் அந்த படத்தின் ரிசல்ட் போல ஆகிவிடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர்.
டீசர் லிங்க் :
