Tamil Cinema News | சினிமா செய்திகள்
கதை திருட்டில் சிக்கிய ஹீரோ படம்.. சிவகார்த்திகேயனை வச்சி செய்றாங்களே

தமிழ் சினிமாவில் அதிவிரைவில் முன்னேறி வரும் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். படத்திற்கு படம் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. அந்தவகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் தான் ஹீரோ.
இந்த படத்தை இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது கதை திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே இந்த படம் படப் பிரச்சினையில் மாட்டி சீரழிந்தது. ஒருவழியாக அந்த பிரச்சனையை முடித்து விட்டு பட ரிலீஸ் தேதியை அறிவித்தனர். ஆனால் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தின் கதை தன்னுடையது என துணை இயக்குனர் போஸ்கோ எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.
இதனால் படக்குழு மற்றும் தயாரிப்பாளர் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. பி.எஸ். மித்ரன் கதையும் போஸ்கோ என்பவரின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முடிவை அதன் தலைவர் பாக்கியராஜ் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஹீரோ படத்தின் புரொமோஷன் வேலைகளில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கதை வழக்கு ஏற்பட்டது சிவகார்த்திகேயனை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக பல படங்கள் கதை திருட்டில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
ஹீரோ வரும் ஆனா வராது என்கிறது கோடம்பாக்கம்.
