Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோ கதை திருட்டு விவகாரம்.. 10 பேர் கொண்ட குழுவில் சிக்கிய சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வரவர கதை திருட்டு பிரச்சனை அதிகமாகிக் கொண்டே வருகிறது. முன்னணி இயக்குனர்கள் முதல் புதிய இயக்குனர்கள் வரை அனைவரும் கதை திருட்டு விஷயங்களில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சிக்கியவர் தான் பி.எஸ். மித்ரன்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த படத்தின் மீது அட்லீயின் உதவி இயக்குனர் போஸ்கோ என்பவர் கதை திருட்டு குற்றம் சாட்டினார். இதனால் உடனடியாக பி.எஸ். மித்ரன், எழுத்தாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ஹீரோ பட கதை தன்னுடையது தான் என்றும், இருவரது கதையையும் 15 பேர் கொண்ட நடுநிலையாளர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி கதை விவகாரத்தை முடித்து வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இருவரிடமும் கதைச் சுருக்கத்தை வாங்கிய எழுத்தாளர் சங்கம், பி.எஸ். மித்ரன் கதையை திருடி விட்டதாக குற்றம் சாட்டியது. மேலும் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் எழுத்தாளர் சங்கம் பி.எஸ். மித்ரனுக்கு அறிக்கை விடுத்தது.
அதில் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட ஆதாரம் ஒன்றை வெளியிட்டது. இதனால் ஷாக்கான மித்ரன், உடனடியாக கதைத்திருட்டு விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போகிறேன் என எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல்தான் ஏ.ஆர். முருகதாஸ், சர்கார் பட விவகாரத்தில் முதலில் கதைத் திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு முருகதாஸ் வசமாக சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அட்லீ இதே வேலையைத்தான் செய்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதுவரை அட்லீ இயக்கிய அனைத்து படங்களும் திருட்டு கதை.
தற்போது சிவகார்த்திகேயன் படம் கதை திருட்டில் சிக்கியது குறித்து தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதை திருடும் கோமாளிகள் உருவாகி வருவதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
ஏற்கனவே ஹீரோ படத்தை தூக்கி அடித்த தம்பி படம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஹீரோ படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் அதை தூக்கி விட்டு கார்த்தி நடித்த தம்பி படத்தை திரையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கதை திருட்டில் இருந்து தப்பிக்க சிவகார்த்திகேயன் 10 பேர் கொண்ட கதை ஆலோசகர்கள் குழுவை உருவாக்கி விட்டாராம். இவர்களை கேட்காமல் இனி படத்தில் நடிக்க போவதில்லையாம்.
