டானா(DON)க மாறிய சிவகார்த்திகேயன்.. கலர்ஃபுல்லாக பட்டையை கிளப்பும் அடுத்த பட அறிவிப்பு வீடியோ

தமிழ் சினிமாவில் வெகுவிரைவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு செம்ம எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். படத்திற்கு படம் வெரைட்டியான பொழுதுபோக்கு படங்களை கொடுத்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தார். முன்னணி நடிகர்களுக்கு பிறகு குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வருவது சிவகார்த்திகேயன் படத்திற்கு தான்.

அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும், ரவிக்குமார் இயக்கத்தில்அயலான் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தன்னுடைய எஸ்கேப் புரோடக்சன்ஸ் மூலம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்திற்கு டான்(DON) என பெயர் வைத்துள்ளனர். இன்ஜினியரிங் காலேஜ் கலாட்டாவாக உருவாகும் டான் படத்தை அட்லீயின் அசிஸ்டன்ட் டைரக்டர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். மேலும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதனை கலாட்டாவான கலர் ஃபுல் வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம். இளைஞர்களின் பல்ஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற படி தன்னுடைய பட அறிவிப்பை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

வீடியோ பார்க்க:- 

மேலும் டான் படத்தை 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் அதே தேதியில் வேறு ஏதாவது முன்னணி நடிகர்களின் படம் வந்தால் தள்ளிப் போகவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்