Tamil Cinema News | சினிமா செய்திகள்
படம் பூஜையுடன் பட்டையை கிளப்பும் டாக்டர் சிவகார்த்திகேயன்.. ரிலீஸ் தேதி தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்
சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்தது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரோடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் நீண்ட நாட்களாக சிவகார்த்திகேயனுடன் இணையாமல் இருந்த அனிருத், டாக்டர் படத்துக்கு இசையமைக்கிறார்.
யோகி பாபு காமெடியனாகவும், நடிகர் வினய் வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் அறிவிப்பு குறித்த மோஷன் போஸ்டர் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
முழுவதும் காமெடி கலந்த அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகிறது. இந்த படம் 2020 ஆயுதபூஜைக்கு ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

doctor-pooja-01

doctor-pooja-02
