Tamil Cinema News | சினிமா செய்திகள்
காப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. சர்ச்சையை கிளப்பிய டாக்டர் போஸ்டர்
நாளுக்கு நாள் தமிழ் சினிமாவில் காப்பி அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இயக்குனர் அட்லீயை காப்பி இயக்குனர் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அவருடைய திரைப்பயணத்தைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது சிவகார்த்திகேயனுக்கு வருவோம்.
வேலைக்காரன் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் படங்களின் முதல் பார்வை போஸ்டர் ஏதேனும் ஒரு படத்தில் இருந்து காப்பி அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் டாக்டர் படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது.
டாக்டர் படத்தின் முதல் பார்வை ஏற்கனவே தனுஷ் நடிப்பில் டாக்டர்ஸ் என்ற பெயரில் உருவாக இருந்த திரைப்படத்தின் முதல் பார்வையை அப்பட்டமாக காப்பியடித்து உள்ளனர் எனவும், தனுஷ் படமான டாக்டர்ஸ் பெயரில் ஒரு ஸ் வார்த்தையை எடுத்துவிட்டு டாக்டர் என வைத்துவிட்டார். மேலும் உட்கார்ந்திருக்கும் போஸ் முதற் கொண்டு காப்பி அடித்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆஹா என்ன ஒரு வித்தியாசம் என கிண்டல்கள் வேறு. இதில் சிவகார்த்திகேயன் இடையில் கத்தியை காட்டி ஏமாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அதிலும் சிக்கல்.

doctor-copy
போஸ்டரை சுற்றியும் கத்தி உள்ள புகைப்படம் ஹாலிவுட்டில் உருவான நைவ்ஸ் அவுட் என்ற ஆங்கிலப்படத்தில் இருந்து சுடப்பட்டு உள்ளது என நெட்டிசன்கள் பரப்புகின்றனர். மேலும் வர வர ரசிகர்களால் உருவாக்கப்படும் போஸ்டர்கள் படக்குழுவினரின் போஸ்டர்களை விட சிறப்பாக வருகிறது.

knives-out
என்னமோ போங்கப்பா!
