Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை பல கோடிக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம்.. கலக்கத்தில் முன்னணி நடிகர்கள்!
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களுக்குள் வந்து விட்டார் என்பது மற்ற நடிகர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
கடந்த வருடம் இறுதியில் வெளியான ஹீரோ படம் சரியாக போகாததால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இருவரும் இணைந்து டாக்டர் எனும் படத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் இருந்து இதற்கு முன் வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைப்பில் வெளியான அந்த பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் சத்தமில்லாமல் டாக்டர் படத்தின் வியாபாரத்தை முடித்து விட்டாராம் சிவகார்த்திகேயன்.
இதுவரை இல்லாத அளவுக்கு முன்னணி நடிகர்களுக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை சுமார் 30 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாம் அமேசான் நிறுவனம்.
இதுதான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் சிவகார்த்திகேயன் வியாபாரம் பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்வது பல முன்னணி நடிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
டாக்டர் படம் தீபாவளிக்கு அமேசான் தளத்தில் வெளியாக உள்ளதும் கூடுதல் தகவல்.
