ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

இது புதுசா இருக்குன்னே.. TRP-க்காக என்னென்ன பண்ணுறாங்க பாரு

இந்த முறை பிக் பாஸ் ஆரம்பித்ததிலிருந்து மங்களகரமாக சென்றுகொண்டிருக்கிறது.  சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’.  படத்தின் ப்ரோமஷன்க்காக சிவகார்த்திகேயன் இப்படி இறங்குவார் என்று யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். 

பிக் பாஸ்-இல் இந்த முறை எல்லாமே புதுசு தான்.  டாஸ்கில் ஆரம்பித்து ஹோஸ்ட் வரைக்கும் அனைத்திலும் புதுமை.  முக்கியமாக, புதிய தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி, கமலுக்கு ஈடு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனையெல்லாம் தவிடு பொடியாக்கி, போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து, ஓட வைத்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவா..

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.  இந்த ப்ரோமோ மக்களின் ஹைப்பை எகிறவைத்துள்ளது. 

அதில், பிக்பாஸ் கதவு திறந்த உடன், சிவகார்த்திகேயன் உள்ளே நுழைகிறார். அவரைப்பார்க்கும் போட்டியாளர்கள் ஆச்சரியத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். அனைவரும் அவரை கட்டிப்பிடிக்க, தொடர்ந்து சேர் போட்டு உட்கார்ந்த சிவகார்த்திகேயன், அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அமரன் திரைப்படத்தை குறித்து பேச ஆரம்பித்தார்.

பிக்பாஸிற்கும், அமரனுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. ஒற்றுமை மிகவும் முக்கியம் என்று கூறினார். தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களின் கிஃப்ட்களை அவரிடம் கொடுக்க, அவர் அப்படியே பிக்பாஸ் வீட்டை ஒரு ரவுண்டு வருகிறார்.  நாளைய தினம் கண்டிப்பாக பிக் பாசை பார்க்கத்தவர்களும் பார்ப்பார்கள். 

- Advertisement -spot_img

Trending News