Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்.. ஒரு வேடத்துக்கே விடை தெரியல, இதுல மூணு வேறயா.?
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் முதல்முறையாக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு கடந்தாண்டு ஒரு படம் வெற்றியும் ஒரு படம் தோல்வியுமாக அமைந்தது. நம்ம வீட்டு பிள்ளை படம் நன்றாக போன போதிலும் ஹீரோ படம் பெரிய அளவில் சிவகார்த்திகேயனுக்கு கைகொடுக்கவில்லை.
முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் திரைப்படமும் பெரிதாகப் போகவில்லை. இதனால் அயலான் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
படத்தின் கதை குறித்து அல்லது கேரக்டர் குறித்த எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை. வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் அன்றைக்கு ஏதாவது அப்டேட் வெளியாகலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
