fbpx
Connect with us

தெலுங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் ரிசல்ட் என்ன ?

sivakarthikeyan

தெலுங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் ரிசல்ட் என்ன ?

காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று பல தோற்றத்தில் வலம் வந்து கொண்டுள்ளளார் சிவகார்த்திகேயன்.

ரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படமும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து மாபெரும் வெற்றியை ருசித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் பெயர் பெற்றது. மேலும் அனிருத் இசையில் எல்லா பாடல்களும் இன்றுவரை ஃபோன்களிலும் டிவி சேனல்களிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே உள்ளது .

சமீபத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. தமிழில் பல வெற்றிகளை கண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம் இதுவேயாகும். இந்நிலையில் தமிழை போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிக் கண்டுள்ளதாம். இதனை பி சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில உறுதி செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top