Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோ ஹீரோனு என்னை வில்லன் ஆக்கிடீங்களேடா.. ஒரு வழியா தீர்ந்த சிவகார்த்திகேயன் பிரச்சனை
சிவகார்த்திகேயனுக்கு இது என்ன ஏழரை சனி காலமா என கோலிவுட் வட்டாரம் பரிதாபப்படும் அளவுக்கு தொடர்ந்து பல சிக்கல்களில் சிக்கி வருகிறார். கடந்த வருடத்தில் வெளியான மூன்று படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே வெற்றியை பெற்றது.
கடந்த வருட இறுதியில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இரும்புத்திரை புகழ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி பிளாப் ஆன திரைப்படம் தான் ஹீரோ. சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதற்கு மாறாக சிவகார்த்திகேயனுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அட்லியின் உதவி இயக்குனரின் கதையை மித்ரன் திருடிவிட்டதாக கேஸ் போட்டு ஜெயித்துவிட்டார். இதனால் ஹீரோ படத்தின் தயாரிப்பாளருக்கும் ஹீரோ படத்தை வாங்கிய சன் டிவி நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஹீரோ படத்தின் விவகாரத்தில் மேல்முறையீடு செய்து ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது. விரைவில் சன் டிவி-யில் ஹீரோ படத்தின் பிரிமியர் ஷோ போடப்பட உள்ளது. அதே சமயத்தில் மித்ரனுக்கு ஹீரோ படத்தின் மூலம் பெரிய நெகட்டிவ் மார்க் அமைந்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
இருந்தாலும் தனது அடுத்தடுத்த படங்களில் அதையெல்லாம் முறியடிப்பார் என நம்பலாம். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் வெளிவந்த படங்கள் எதுவுமே தமிழ் சினிமாவில் வெற்றி பெறாது என்பதை மீண்டும் உணர்த்தியது ஹீரோ.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
