Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனின் ஹீரோ சென்சார் தகவல்.. நல்லா கவனமாக இருக்காருங்க!

hero-sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ஹீரோ சென்சார் தகவல்.. நல்லா கவனமாக இருக்காருங்க!

இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தில் டிரெய்லர் நேற்று பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பிஎஸ் மித்ரன் சிவகார்த்திகயேன் கூட்டணியில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ. இதில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது.

வரும் 20ஆம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்தள்ளது. .ஹீரோ படத்தின் டிரெய்லரை பார்க்கையில் இப்படம், இளம் புதிய கண்டுபிடிப்பாளர்களின் கனவுகளை அழிக்கும் வில்லனை எப்படி சிவகார்த்தியேன் அழிக்கிறார் என்பதாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் மருத்து மாணவி மரணம் உள்பட பல விஷயங்கள் உள்ளே இருக்கலாம் என தெரிகிறது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களுமே யூ சான்றிதழ் பெற்றுவருகிறது. அதாவது குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம் என்பதை குறிப்பிடும் விதமாக இந்த படமும் அதே யூ சான்றிதழ் பெற்றுள்ளது

குழந்தைகளை அதிகமாக ரசிகர்களாக கொண்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய எல்லா படங்களையும் குழந்தைகள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என கவனமாக இருப்பதாக தெரிகிறது. அதனாலயே அவரது படங்கள் தொடர்ந்து யூ சான்றிதழ் பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top