Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயனிடம் உதவி கேட்கும் நிலைமைக்கு வந்த சிம்பு.. அடக் கொடுமையே!

str-sk-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனிடம் உதவி கேட்கும் நிலைமைக்கு வந்த சிம்பு.. அடக் கொடுமையே!

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை அதிகம் வைத்துள்ள நடிகராக வலம் வரும் சிம்பு தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தனக்கான மார்க்கெட்டை இழந்து தற்போது மீண்டும் அதை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

சிம்புவின் சினிமா கதை ஊர் அறிந்ததுதான். ஆனால் சமீபகாலமாக முற்றிலும் மாறி விட்டார். சொன்ன தேதிக்கு சொன்ன நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது, தயாரிப்பாளர்கள் மனசு கோணாமல் நடந்து கொள்வது என சிம்புவின் மாற்றம் அனைவருக்குமே அதிர்ச்சிதான்.

இதே செயலை ஆரம்பத்திலிருந்து கடைபிடித்திருந்தால் இந்நேரம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்திருப்பார். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. ஆனால் சிம்பு இடைவெளிவிட்ட இந்த சில வருடங்களில் பல நடிகர்கள் முன்னேறி விட்டனர்.

simbu-sivakarthikeyan-cinemapettai

simbu-sivakarthikeyan-cinemapettai

அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் தங்களுக்கு என ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பதித்து விட்டனர். சிவகார்த்திகேயன் சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாராம். சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் சமூகவலைதளங்களில் பெரிய அளவு பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது படக்குழு.

maha-teaser

maha-teaser

சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்துள்ள மகா படத்தின் டீசரை இன்று மாலை வெளியிட உள்ளார் சிவகார்த்திகேயன். இது ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் மட்டும்தான் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சிம்புவின் ஒத்துழைப்பை பார்த்துவிட்டு மேலும் சில காட்சிகளை சேர்த்து சிம்பு படமாகவே மாற்றி விட்டாராம் இயக்குநர் ஜமீல்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top