சிவகார்த்திகேயனின் தீராத ஆசையை நிறைவேற்றிய ரசிகை ! கரம் கூப்பி நன்றி சொன்ன ஹீரோ !

சிவகார்த்திகேயன்

வேலைக்காரன் பட வெற்றிக்கு பிறகு தற்பொழுது சிவகார்த்திகேயன்
பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ரஹ்மான் இசையில் ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஷன் படம் என மனிதர் செம்ம பிஸி. வளர்ந்து வரும் காமெடியன் சிவகார்த்திகேயன் என்ற நிலையில் இருந்து முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் என்ற நிலையை அடைந்து விட்டார். இந்த அசுர வளர்ச்சிக்கு 24 AM ஸ்டுடியோஸ், ஆர். டி ராஜாவின் பங்களிப்பும் முக்கிய காரணம்.

அப்பா சென்டிமென்ட்

தன் இளம் வயதிலேயே தந்தை இழந்தவர் சிவா. எப்பொழுதுமே இவருக்கு அப்பாவின் மீது தனி அன்பு, பாசம் உண்டு. இது அனைவரும் அறிந்ததே. பல மேடைகளில் “நான் சம்பாதித்து என் அப்பாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்ததில்லை” என சிவகார்த்திகேயன் மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

SK

மேலும் கடந்த 2014 இல் பிரபல தொலைக்காட்சியில் விருது பெற்றார். அப்பொழுது அந்த தருணத்தை பகிர்ந்துகொள்ள தன்னுடன் அப்பா இல்லை என வறுத்தப்பட்டு மேடையிலேயே கண் கலங்கினார்.

இந்நிலையில் விருது வாங்கிய தருணத்தை. அப்படியே கண் முன் கொண்டு வரும் விதமாக சிவகார்த்திகேயனுடன் அவரது தந்தை நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டார்.

Sivakarthikeyan with his Father – Pencil Art

அதில் மகனின் சினிமா விருது கேடயத்தை கையில் வைத்துக் கொண்டு தந்தை நிற்பது போலவும், உடன் இருக்கும் சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் மைக்கில் பேசிக் கொண்டிருக்க்கும் போலவும் அந்த ஓவியம் உள்ளது.

“மேலும் உங்களின் அழுகை சிரிப்பாகவும், கனவு நிஜமாகவும் இந்த ஓவியம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை கண்டு மனம் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் அந்த ஓவியத்திற்கு பதில் டுவிட் போட்டார்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை. அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது எனக்கு ஸ்பெ‌ஷலானது. நன்றியம்மா. ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே’ என்று பதிவிட்டுருந்தார்.

Comments

comments

More Cinema News: