சிவகார்த்திகேயன், கௌதம் மேனன் இணையும் படம் இப்படித்தான் இருக்கும்? உஷாரா இருக்கச் சொல்லும் ரசிகர்கள்

என்னதான் வித்தியாசம் வித்தியாசமாக முயற்சி செய்தாலும் கடைசியில் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த படம் தோல்வி தான். கடந்த சில படங்களாகவே கவுதம் மேனன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தற்போது சிம்புவுடன் இணைந்து அவர் உருவாக்கிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படம் முற்றிலும் வித்தியாசமாக உருவாகி வருகிறது.

இதுவரை கிராமத்து படங்களை எடுக்காத கௌதம் மேனன் முதல் முறையாக முயற்சி எடுத்துள்ளார். மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி வைரலானது.

அந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக தமிழ் சினிமாவில் தற்போதைக்கு செம மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி போடவுள்ளாராம். முதல் முறையாக இந்த கூட்டணி சேர உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தபோதிலும் இது எந்த மாதிரி படமாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால் கௌதம் மேனன் சிவகார்த்திகேயனை வைத்து புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் தனக்கு பரிச்சயமான காதல் கதையை படமாக்க உள்ளாராம். இதைக் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தயவு செய்து உஷாராக இருக்க வேண்டும் என சிவகார்த்திகேயனை எச்சரித்து வருகின்றனர்.

என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களெல்லாம் அவர்கள் கண் முன்னாடி வந்து செல்லுமல்லவா. சிவகார்த்திகேயன் ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னர் நடிகர், கௌதம் மேனனோ பக்கா கிளாஸ் இயக்குனர். இவர்கள் இருவரும் இணைந்து எப்படிப்பட்ட படத்தை தரப் போகிறார்களோ?

sivakarthikeyan-gautham-menon-cinemapettai
sivakarthikeyan-gautham-menon-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்