மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.Sivakarthikeyan-Velaikkaran

அதேநேரத்தில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் நடித்திருக்கிறார்.