Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தான் எடுத்தாரு.. இயக்குனராக இருந்த மனுசன் அசிஸ்டெண்ட் டைரக்டரா மாறிட்டாரு!
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகராக மாறி வரும் நடிகர் சிவகார்த்திகேயன். படத்துக்கு படம் இவரது ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் பல சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க ரெடியாக இருப்பதால் அவரது மார்க்கெட் தற்போது 15 கோடியை எட்டியுள்ளது.
ஆனால் சிவகார்த்திகேயனை வைத்து தோல்வி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அதலபாதாளத்திற்கு சென்று விடுவது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் பொன்ராம் என்று இயக்குனரை தொடர்ந்து மீண்டும் ஒரு இயக்குனர் அந்த லிஸ்டில் வந்து சேர்ந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை.
சிவகார்த்திகேயனை வைத்து மான் கராத்தே எனும் மட்டமான படத்தை கொடுத்த திருக்குமரன் என்பவர் தான். இவர் ஏ ஆர் முருகதாஸ் அசிஸ்டன்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மான் கராத்தே படம் சரியாக போகாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த திருக்குமரன் மீண்டும் தளபதி65 படத்திற்காக ஏ ஆர் முருகதாஸிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக வந்துவிட்டாராம்.
அதேபோல் சிவகார்த்திகேயனை வைத்து சீமராஜா எனும் தோல்வி படத்தை கொடுத்த பொன்ராம் தற்போது சொந்த செலவில் படம் எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாரும் படவாய்ப்பு தராததே அவரது இந்த முடிவுக்கு காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
