மெல்ல மெல்ல தனுஷ் இடத்தை பிடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. வளர்த்த கிடா மார்பில் முட்டுது

என்னதான் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் தங்களுக்குள் எந்த போட்டி பொறாமையும் இல்லை என நடிகர்கள் கூறினாலும் அவர்களுக்குள் நிச்சயம் பொறாமை இருந்து கொண்டு தான் இருக்கும். ஏதேனும் சம்பவங்கள் நடக்கும் போதுதான் அது வெளிச்சத்திற்கு வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் மறைமுகமாக பனிப்போரில் ஈடுபட்டு வரும் இரண்டு நடிகர்கள் குறித்து தான் பார்க்க போகிறோம். அவர்கள் வேறு யாருமல்ல டாப் நடிகர் தனுஷ் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவர் தான். என்னதான் ஆரம்பகாலத்தில் சிவாவின் சினிமா வாழ்க்கைக்கு தனுஷ் உதவி இருந்தாலும், சமீபகாலமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது.

நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயன் நடிக்க வந்த மிக குறைந்த காலத்திலேயே அவருக்கு இணையான ரசிகர்களை பிடித்து விட்டார். தற்போது சிவாவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் உள்ளனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் தனுஷின் கர்ணன் படத்தை விட அதிக வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இதனால் தனுஷ் மட்டுமின்றி அவர் தரப்பு ரசிகர்களும் கடுப்பில் இருந்தனர். இந்நிலையில் தான் பாகுபலி பட இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து உதயநிதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இதில் தனுஷ் தரப்பிற்கு என்ன கடுப்பு என்றால் ஆர்ஆர்ஆர் படக்குழு முதலில் தனுஷிடம் பேசிய பின்னர் தான் சிவகார்த்திகேயனை அழைத்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்தைவிட சிவகார்த்திகேயனுக்கு தான் அதிக புரமோஷன் கிடைத்தது. படத்தின் இயக்குனர், நடிகர்கள் என அனைவரும் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.

அதுபோக நிகழ்ச்சியின் இறுதியில் டிரம்ஸ் கலைஞர்களுக்கு நன்றி கூறவில்லை என தொகுப்பாளர்களுக்கு சிவகார்த்திகேயன் சைகை மூலம் கூறிய வீடியோ ஒன்று டிரண்டானது. இதை கண்ட ரசிகர்கள் இவர்தான்யா மனுசன் என அவரை பாராட்டி தள்ளி விட்டார்கள். இதனால் தற்போது தனுஷ் தரப்பு உச்சக்கட்ட கடுப்பில் உள்ளதாம்.

இதைத் தவிர தற்போது சிவகார்த்திகேயன் பான் இந்தியா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அப்படியாக இருந்தாலும் நம்ம தனுஷ் ஹாலிவுட் வரை சென்று விட்டார். விரைவில் தனுஷுக்கு இணையாக சிவா வளர்ந்து விடுவார் போல தெரிகிறது. யாருக்கு தெரியும் தனுஷையே பீட் செய்து சிவா சென்றாலும் ஆச்சரியமில்லை. ஓ இதை தான் வளர்த்த கிடா மார்பில் முட்டுவது என சொல்வார்களோ?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்