ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன்.. போட்டியாளர்களுக்கு கொடுத்த ஃப்ரீ அட்வைஸ்

Biggboss 8-Sivakarthikeyan: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடந்து மூன்றாவது வாரத்தின் முடிவில் இருக்கிறது. இந்த வாரம் வீட்டுக்குள் ஏகப்பட்ட சர்ச்சைகளும் பஞ்சாயத்துகளும் வரிசை கட்டியது.

கடந்த வாரம் சில பிரச்சனைகள் இருந்த நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் அதை டீல் செய்தார். ஆனால் அதுவே சில விமர்சனங்களுக்கு ஆளானது. அதனால் இந்த வாரம் அவர் கொஞ்சம் சுதாரிப்புடன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் சர்ப்ரைஸ் தருவது போல் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய அமரன் தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன்

கமல் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ் கே மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அதன் பிரமோஷனுக்காக தற்போது அவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அவரை வரவேற்ற போட்டியாளர்கள் அமரன் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தி இருக்கின்றனர். அதேபோல் சிவகார்த்திகேயன் அமரனுக்கும் பிக் பாஸ் வீட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது என கூறினார்.

மேலும் போட்டியாளர்களிடம் ஒற்றுமையோடு விளையாடுங்கள் என ஃப்ரீ அட்வைஸையும் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் இன்று இரவு இந்த எபிசோடை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News