புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிவகார்த்திகேயன் படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. செம்ம ஸ்மார்ட்டான வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் பாலசரவணன். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பு திறமையால் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்தில் சிறிய காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், டார்லிங், வேதாளம், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக பாலசரவணன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், வரிசையில் தற்போது பாலசரவணனும் இணைந்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி டான் வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பாலசரவணன் டான் படத்திற்காக சுமார் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலசரவணன் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாகவும், அதனால் எடையை குறைத்து உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

bala-saravanan
bala-saravanan

மேலும் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கொழுகொழுவென புஷ்டியாக இருந்த பாலசரவணன் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டான் படத்திற்காக 20 கிலோ வரை எடையைக் குறைத்து தனது லுக்கை மாற்றியுள்ள பாலசரவணனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News