அடுத்த பட ரிலீஸுக்கு சன் டிவியை மழைபோல் நம்பும் சிவகார்த்திகேயன்.. என்ன இப்படி இறங்கிட்டாங்களே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து பல இயக்குனர்கள் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் படங்களில் மட்டும் நடித்துவரும் சிவகார்த்திகேயன் படம் எதையாவது பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறுகின்றன.

அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் வெளியாவதை பற்றி நாளுக்கு நாள் புதிய புதிய கதைகள் எல்லாம் படக்குழுவினர் கூறி வருகின்றனர் முதலில் எப்படி இருந்தாலும் நாங்கள் தியேட்டர் தான் வெளியிடுவோம் என கொடி பிடித்தனர். அதன் பிறகு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறினார்.

doctor-cinemapettai
doctor-cinemapettai

இதனால் ரசிகர்கள் தொடர்ந்து ஏமாந்து வந்த நிலையில் தற்போது இனிமேல் அவர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை உணர்ந்த படக்குழு திட்டவட்டமாக டாக்டர் படம் நேரடியாக டிவியில் ரிலீஸாவதாக தெரிவித்துள்ளனர்.

முதலில் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்த பில்டப்பால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது என கூறி வருகின்றனர். மேலும் இனிமேல் தியேட்டரில் வெளியான கூட ரசிகர்கள் பார்ப்பது கடினம் ஆனால் சன் டிவியில் படம் வெளியானால் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எப்படியும் பார்ப்பார்கள் என்பதற்காக இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்