Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் சும்மா ஒன்னும் பெரிய நடிகர் ஆகல.. எல்லாம் இதனால்தான்.. கொந்தளித்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமா நடிகர்கள் மீது தியேட்டர் ஓனர்கள் செம கடுப்பில் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்த வருகிறது. நாளுக்கு நாள் தியேட்டர் ஓனர்கள் நடிகர்களை தாக்கிப் பேசி வருகின்றனர்.
அதற்கு காரணம் சூர்யா தன்னுடைய தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் மற்றும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்களையும் அமேசான் நிறுவனத்திற்கு கொடுத்ததுதான்.
தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் சூர்யாவின் வழியை பின்பற்ற ஆரம்பித்ததால் அதிர்ச்சியான தியேட்டர் ஓனர்கள் கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசி வருகின்றனர்.
அதிலும் தயாரிப்பாளரும் தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம் வேதனையுடன் கூறுவது இதைத்தான். தியேட்டர்கள் இல்லாமல் பெரிய நடிகர்கள் உருவாகவில்லை என்பதை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை விட டிவியில் படம் பார்க்கும் ரசிகர்கள் அதிகம் தான். இருந்தாலும் தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என்றால் சிவகார்த்திகேயன் போன்ற ஸ்டார் நடிகர்கள் உருவாகியிருக்க முடியாது.
ஏற்கனவே பாதி திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் இனி எந்த ஒரு ஸ்டார் நடிகர் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.
அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டாக்டர் படம் OTT தளத்திற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதை காதில் கேட்டதால் அவரை லேசாக வம்புக்கு இழுத்து விட்டாராம்.
