Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னது சிவகார்த்திகேயனுக்கு விவாகரத்தா? இப்படியெல்லாமா பண்ணுவாங்க
எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இருக்கிறார் என்றால் கடுமையான உழைப்பும் ஒரு காரணம் என்று கூறலாம்.
காவலரின் மகனாகப் பிறந்த சிவகார்த்திகேயன், வசதியான வீட்டு பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் பணியாற்றும் போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும்போது சிவகார்த்திகேயனுக்கும் மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட்டது என பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. இதனைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயன், இப்படியெல்லாம் கூறுவார்களா என வருத்தத்தில் தனது மனைவியிடம் புலம்பியுள்ளார்.
அதற்கு ஆர்த்தி சினிமாவில் பிரபலமாகும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வருவது சகஜம் தான் என சிவகார்த்திகேயனுக்கு தைரியம் சொல்லி தற்போது வரை தன்னுடைய குடும்பத்தை எந்த ஒரு பத்திரிக்கையாளர்களும் நெருங்க முடியாத அளவுக்கு குடும்பம் வேறு சினிமா வேறு என பாதுகாத்து வருகிறாராம் ஆர்த்தி.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த 8 வருடத்தில் ஒரு நடிகன் இந்த அளவு உயர முடியுமா என்பதை சாத்தியமாக்கி கட்டியவர்.
