கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை.. ரூட்டை மாற்றி தப்பிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. கிட்டதட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து சினிமா வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால் டாக்டர் படத்திற்கு முன்பே சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களைத் தயாரித்துள்ளார். அதாவது அவரது நெருங்கிய நண்பரை வைத்து 24am ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் வேலைக்காரன், சீமராஜா உட்பட ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் கடன் பிரச்சினையில் சிக்கினார்.

சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. ஆனால் அதே அளவிற்கு இவருக்கு சுற்றி கடன் இருப்பதால் அதனை சமாளிப்பதற்கு தமிழ்மொழி தாண்டி மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த உள்ளார் காரணம் மற்ற மொழி படங்களில் நடித்தால் அந்த மொழியில் படம் வெளியாவது மட்டுமில்லாமல், தமிழ் மொழியிலும் வெளியாகும் அதனால் தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நேரடியான தனது 20வது படத்தை தெலுங்கில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையை ஜனவரி 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த படத்தில்  சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்க உள்ளதால் சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பினை நடத்த திட்டமிட்டனர்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை எந்த படத்திற்கும் வாங்காத ஒரு பெரும்தொகை பேசப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகலாம் மேலும் அடுத்தடுத்து வெளியாகும் படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட்டு தனது மார்க்கெட் உயரும்.

இந்த தகவலை சிவகார்த்திகேயனின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இதைத்தவிர தமிழில் நடிப்பதற்கு 50% சம்பளத்தை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்