முதலாளியாக விருதுகளை குவிக்கும் சிவகார்த்திகேயன்.. ட்விட்டரில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பற்றி சமீபத்தில் வெளியான செய்திகள் அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது. அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, நாம் வெற்றியைத் தான் பதிலடியாக கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் போல சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தன்னுடைய கடின உழைப்பால் வெள்ளித்திரையில் மிகப்பெரிய வெற்றியை பார்த்தார். சினிமாவில் ஒரு அளவுக்கு தனக்கான இடத்தை பிடித்ததும், ஆரம்பகால கட்டங்களில் தன்னுடன் சினிமா கனவை சுமந்து கொண்டு பயணித்த பலருக்கும் வாய்ப்பு அளித்தார். அதற்காகவே சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கனா படத்தை முதன் முதலாக சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். அதை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களையும் தயாரித்து வெளியிட்டு வந்தார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல படங்களை அவர் கொடுத்து வருகிறார்.

Also Read:தேசிய விருது வாங்கியும் கமுக்கமாக இருந்த உறியடி விஜய்.. இந்த விஷயத்துல லோகேஷியை மிஞ்சிட்டாரு!

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் சூரி இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். தன்னுடைய நண்பனை அடுத்த கட்டத்திற்கு தூக்கி விடும் விதமாக சூரியை ஹீரோவாக வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரித்தார். சூரி மற்றும் அன்னா பெண் இணைந்து நடித்த இந்த படத்திற்கு கொட்டுக்காளி என பெயரிடப்பட்டது.

இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு காட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் படம் இதுதான். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் வினோத் ராஜா இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்கல் படத்தை இயக்கியவர் ஆவார். இந்த படமும் சர்வதேச திரையரங்கில் நிறைய விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read:அமீரை தவறாக பேசிய 5 பிரபலங்கள்.. ஞானவேல் ராஜாவுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்