நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகர் இடத்தை மிக விரைவாக பிடித்துவிட்டார்.

இவர் அறிமுகமான புதிதில் இவருக்கு அதிக ஆதரவு கொடுத்தவர் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளார்கள் ஆனால் தற்போது தனித்தனியாக படங்களில் நடித்து வருகிறார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பாக்ஸ் ஆபிஸில் நேரடியாக மோத இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  ரெமோ படத்தில் அறிமுகமாகும் யூ டியூப் பிரபலம்!

தனுஷ் நடித்துள்ள மாரி-2 திரைப்படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தையும் அதே தேதியில் வெளியிட உள்ளார்களாம் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் சீதக்காதி படமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.