புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிவகார்த்திருக்கேயனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட தனுஷ்.. இவங்களுக்குள்ள பஞ்சாயத்துன்னு யாருப்பா சொன்னா?

Sivakarthikeyan: நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷுக்கும் வாய்க்கா தகராறு என பல வருடங்களாக பேசப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு நன்றி உணர்வு இல்லை, தனுஷ் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தடுக்கிறார் என பல செய்திகளை பார்த்திருப்போம்.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நான் யாரையும் வளர்த்து விட்டேன் என்று சொல்ல மாட்டேன் என்று பேசி இருந்தார். சிவகார்த்திகேயன் தனுஷை தான் மறைமுகமாக தாக்குகிறார் என சொல்லப்பட்டது.

இவங்களுக்குள்ள பஞ்சாயத்துன்னு யாருப்பா சொன்னா?

பேசிட்டு போங்க, கதை எழுதுறவங்க எழுதிட்டு போங்க நாங்க எங்க வேலையை பார்க்கிறோம் என்று இரண்டு பேரும் சந்தோஷமா தான் சுத்துறாங்க போல. சமீபத்தில் இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன், அனிருத் என்று பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள். அவருடைய சங்கீத் பங்க்ஷனில் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது.

அந்த பங்க்ஷனில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் விஐபி படத்தில் வரும் வாட்ட கருவாட் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் அட்லியும் சேர்ந்து ஆடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

SK and D
SK and D
- Advertisement -

Trending News