Connect with us
Cinemapettai

Cinemapettai

sk

Tamil Cinema News | சினிமா செய்திகள்

22 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்றது, கடன் கழுத்தை நெறிக்குது.. புலம்பும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்தில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

குறிப்பிட்ட முன்னணி நடிகர்களுக்கு பிறகு அதிக அளவு மார்க்கெட் வைத்திருக்கும் நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் படங்கள் கிட்டத்தட்ட 80 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறதாம்.

இதன் காரணமாக கடந்த சில படங்களுக்கு சிவகார்த்திகேயன் சுமார் 22 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இருந்தாலும் சிவகார்த்திகேயன் பல்வேறு கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக பலரும் பல பேட்டிகளில் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

நடிப்பதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, படம் தயாரிக்கிறேன் என நண்பர்கள் பெயரிலும் தன்னுடைய மேனேஜர் பெயரிலும் அதிக அளவு பணம் செலவழித்து படம் தயாரித்தது தான் தற்போது அவருடைய கடனுக்கு காரணம் என்கிறார் டூரிங் டாக்கிஸ் சித்ரா லட்சுமணன்.

sivakarthikeyan-cinemapettai

sivakarthikeyan-cinemapettai

போதாக்குறைக்கு கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பல சிக்கலுக்கு ஆளாகி உள்ளாராம் சிவகார்த்திகேயன். இருந்தாலும் இதெல்லாம் கொஞ்ச நாள் தான் எனவும், விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவார் எனவும் கூறியுள்ளார்.

நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் படம் தயாரிப்பதில் இறங்குவதுதான் அவர்களுக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை பேர் இப்படி மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்களோ தெரியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top