புதன்கிழமை, நவம்பர் 13, 2024

குட்டி பொண்ணு ஆராதனாவா இது.. ஆர்த்தியுடன் தீயாக பரவும் சிவகார்த்திகேயன் மகளின் போட்டோ

Sivakarthikeyan: சின்னத்திரையில் இருந்து வந்து இப்போது கோலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் தயாராகி இருக்கிறது. வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படம் அவருக்கான மிகப்பெரும் அடையாளமாக இருக்கிறது.

aaradhana
aaradhana

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படமான இதில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதைத்தான் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.

aaradhana-arthi
aaradhana-arthi

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவருடைய மகள் ஆராதனா தன் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்பா செல்லமான இவர் கனா படத்தில் வாயாடி பெத்த பொண்ணு என்ற பாடலை பாடி பல விருதுகளை அள்ளினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் இவரை பார்த்திருக்கிறோம்.

சிவகார்த்திகேயன் மகளின் லேட்டஸ்ட் போட்டோ

அதன்படி தற்போது அவர் ஆர்த்தியுடன் க்யூட்டாக இருக்கும் போட்டோ ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. நேற்று ஆராதனா தன்னுடைய 11 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது.

அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிறு குழந்தையாக பார்த்த ஆராதனவா இது, அம்மாவைப் போன்றே அழகாக இருக்கிறார் என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

டீன் ஏஜ் பருவத்திற்குள் நுழைய போகும் ஆராதனா சினிமாவில் நடிப்பாரா எனவும் சில ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இப்படித்தான் அஜித் மகளும் நடிக்க வருவாரா என ரசிகர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகின்றனர்.

ஆனால் அதற்கு அஜித் சம்மதிக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படித்தான் சிவகார்த்திக்கேனும் தன் மகளின் திறமையை வளர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார். அதனால் ஆராதனா ஹீரோயினாக நடிக்க வருவதெல்லாம் சந்தேகம்தான்.

- Advertisement -spot_img

Trending News